நாட்டை முடக்க முடியாது என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசியல் மற்றும் சுகாதார தரப்பு அழுத்தங்களுக்கு அப்பால் பௌத்த மதத் தலைவர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பார் என எதிபார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி வழங்குவதன் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிக்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.
இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஒட்டுமொத்த மக்களும் இன்று பேரழிவை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த நேரத்தில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தது ஒரு வார காலம் நாட்டை மூடி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.