Home கனடா லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி

லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி

by Jey

எதிர்வரும் பொதுத் தேர்தலில் லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 12ம் திகதி முதல் 20ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான ஆதரவு 3.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி சற்றே அதிகளவில் காணப்பட்ட போதிலும் தற்பொழுது இந்த இடைவெளி குறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

related posts