ஆப்கானிஸ்தானிலிருந்து சுமார் 1100 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர் என கனேடிய குடிவரவு அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் சுமார் ஆயிரத்து நூறு பேரை கனடாவிற்கு அழைத்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் படையினரின் ஒத்துழைப்புடன் இவ்வாறு ஆப்கானிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4ம் திகதி முதல் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் கனடாவிற்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கனடாவிற்குள் பிரவேசித்த ஏதிலி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் அந்த குழந்தை ஒர் கனேடிய பிரஜை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.