எல்லைகள் திறக்கப்பட்டதன் பின்னர் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் கனடாவிற்கு வருகைத் தருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்கர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் கனடாவிற்கு வருகை தருவதாக கனேடிய அரசாங்க புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தியாவசிய தேவைகளை உடையவர்களுக்கு மட்டுமே இதுவரையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 9 முதல் 15ம் திகதி வரையில் கனடாவிற்குள் பிரவேசித்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களை விடவும் 111 வீதமாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.