தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தனது சொந்த பணத்தை உதவித் தொகையாக அன்பளிப்பு செய்ய வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே தனது சொந்த நிதியில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் அவர் வழங்குகிறார். நாஹேன பிரதேசத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பண உதவி பெற மக்கள் கூட்டம் வருவதை காண முடிகிறது.