கனடாவில் கோவிட் நிலைமைகள் குறித்த புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் நாளாந்த கோவிட் பாதிப்பு நிலைமைகள் பற்றிய புள்ளி விபரத் தகவல்களை வெளியிடுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இவ்வாறு தகவல்கள் வெளியிடப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் பெருந்தொற்று தாக்கம் ஆரம்பமான காலம் முதல் ஒரு வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொற்றாளர் எண்ணிக்கை, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பன குறித்து தெளிவுபடுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்படாமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.