Home கனடா தடுப்பூசியினால் மட்டும் நான்காம் அலையை கட்டுப்படுத்த முடியாது

தடுப்பூசியினால் மட்டும் நான்காம் அலையை கட்டுப்படுத்த முடியாது

by Jey

கனடாவில் தடுப்பூசிகளினால் மட்டும் கோவிட் நான்காம் அலையை கட்டுப்படுத்த முடியாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு செய்தால் மட்டுமே நான்காம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் முடக்கங்களை தவிர்க்கவும் முடியும் என குறப்பிட்டுள்ளனர்.

கனடாவில் சுமார் பத்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நான்காம் அலையின் போது அதிகளவான முடக்கங்கள் அறிவிக்கப்படலாம் எனவும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

related posts