Home சினிமா நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் எச்சரிக்கை

நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் எச்சரிக்கை

by Jey

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அந்த திரைப்படத்தின் நஷ்டத்திற்கு சிம்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். அத்துடன் சிம்புவால் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன் பேரில் நடிகர் சிம்புவுக்கு (Simbu) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது. இதனை அடுத்து கெளதம் மேனன் (Gautham Vasudev Menon) இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ (Vendhu Thaninthathu Kaadu) என்ற திரைப்படத்திற்கு தொழிலாளர் சம்மேளன பெப்சியை ஒத்துழைப்பு அளிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஆதர்சமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தரப்பில் இருந்தும் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனை அடுத்து சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து எந்த முடிவையும் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

related posts