Home கனடா ட்ரூடோவின் பிரச்சாரக் கூட்டம் ரத்து

ட்ரூடோவின் பிரச்சாரக் கூட்டம் ரத்து

by Jey

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் போல்டன் பகுதியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடாத்தப்படவிருந்தது.

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்தப் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக லிபரல் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டங்களில் ஈடுபடுவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த பெருந்தொற்று நிலைமை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்குபற்றும் நபர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியாத காரணத்தினால் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts