Home கனடா 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி வழங்க அனுமதி

12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி வழங்க அனுமதி

by Jey

12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மொடர்னா எனப்படும் கோவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய சுகாதார திணைக்களம் இந்த அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 12 வயது முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க முடியும் என பரிந்துரை செய்பய்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பைசர் தடுப்பூசியை 12 முதல் 17 வயதான சிறார்களுக்கு பயன்படுத்த சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

மொடர்னா தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் சிறார்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும் என நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தேசிய ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

related posts