கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு நாடு முழுவதும் பரவியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தரவுகள் படி நாட்டில் 292 டெல்டா பிறழ்வு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக கலாநிதி சந்திம தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி கொழும்பில் 100% டெல்டா பிறழ்வு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமன்றி கிரிபத்கொட, கடுவெல, நுகேகொட, கல்கிஸ்ஸ, பிலியந்தல, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, அம்பலாங்கொட, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் டெல்டா பிறழ்வுடன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.