இலங்கைக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்குத் தேவையான எரிபொருட்களை கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வது குறித்து பிரபல நாடுகளிடம் பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஈரான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
6 மாதங்களுக்குத் தேவையான சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி எரிபொருள் கொள்வனவு குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ஆறு மாதங்களில் கடனை திருப்பிச் செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரையான பேச்சுவார்த்தை சாதக நிலையில் உள்ளதாகவும் வெற்றியளித்த பின் கடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு பின் எரிபொருள் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.