போராட்டங்களைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு போராட்டக்காரர்களினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் ட்ரூடோ காலநிலை மாற்றம் தொடர்பிலான தமது கொள்கைகளை அறிவிக்கவிருந்த பிரச்சார கூட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டிருந்தது.
கனடாவை முன்னோக்கி நகர்த்தும் தமது முனைப்புக்களை இவ்வாறான இடையூறுகளுக்காக நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போராட்டங்களினால் தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் கனேடியர்கள் சரியான பாதையை அறிவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.