கனடாவிற்கு செல்லும் தமது நாட்டு பயணிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்கு செல்லும் அமெரிக்கர்கள் தங்களது பயணம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்கான பயணங்கள் மூன்றாம் நிலை ஆபத்துடையது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவிற்கான பயணங்களின் போது மிகுந்த அவதானம் தேவை என தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளார்.
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது.