Home கனடா கியூபெக்கில் கோவிட் சான்றிதழ் முறைமை அறிமுகம்

கியூபெக்கில் கோவிட் சான்றிதழ் முறைமை அறிமுகம்

by Jey

கியூபெக் மாகாணத்தில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி சான்றிதழ் ஆதாரம் மாகாணத்தில் அத்தியாவசியமான ஓர் தேவையாக மாற்றமடைகின்றது.

வீட்டு சாவியைப் போன்று உங்களது பணப் பை போன்று இனி வரும் காலங்களில் தடுப்பூசி சான்றிதழும் அத்தியாவசிய தேவையாக மாற்றமடைகின்றது.

இந்த சான்றிதழை கோவிட்19 தடுப்பூசி கடவுச்சீட்டு எனவும் அழைக்கின்றனர்.

பொது இடங்களுக்குச் செல்வதற்கு, விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு, விருந்துபசாரங்களில் பங்குபற்றுவதற்கு இந்த தடுப்பூசி சான்றிதழ் அத்தியாவசியமாகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாரியோ, மானிடோபா போன்ற மாகாணங்களில் இந்த சான்றிதழ் தொடர்பில் இதுவரையில் திடமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

related posts