Home உலகம் கொவிட் நிலைமைகளுக்கு மத்தியில் சுவிஸில் மக்கள் தொகை அதிகரிப்பு

கொவிட் நிலைமைகளுக்கு மத்தியில் சுவிஸில் மக்கள் தொகை அதிகரிப்பு

by Jey

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தொகை கடந்த ஆண்டு 64,300 பேரால் அதிகரித்து 8,670,300 ஆக பதிவாகியுள்ளது. கொவிட் தொற்றால் ஏற்படும் இறப்புகளில் சடுதியான அதிகரிப்பு இருந்தபோதிலும், சனத்தொகை 0.7% அதிகரிப்பைக் காண்பிக்கிறது.

Neuchâtel, Appenzell Ausserrhoden, Ticino தவிர அனைத்து 26 கன்டோன்களிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) உறுதியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த சனத்தொகை அதிகரிப்புக்கு FSO மூன்று காரணிகளை முன்வைக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்து 53,800 மக்கள் குடியேறியதன் விளைவாக சனத்தொகை 1.6% அதிகரித்துள்ளது.

இறப்புகளை விட 9,700 அதிக பிறப்புக்கள் பதிவாகியுள்ளன. இது 2019 ஆம் ஆண்டின் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையாகும். அதிகப்படியான பிறப்புகள் சூரிச்சில் பதிவாகியுள்ளன. மாறாக, Ticino, Jura, Glarus, Neuchâtel, Schaffhausen, Basel Country, Basel City, Graubünden, Bern ஆகிய இடங்களில் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

FSO மேற்கோள் காட்டிய மூன்றாவது காரணி, கன்டோனில் இருந்து கன்டோனுக்கு இடம்பெறும் உள் இடம்பெயர்வு ஆகும். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து குடியேறிய புதிய குடியிருப்பாளர்களின் அதிக விகிதத்தை Fribourg கண்டது; பாசெல் நகரம் அதன் குடிமக்கள் அதிகமாக வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த விகிதத்தை காண்பிக்கிறது.

கொவிட் தொற்றால் சுவிட்சர்லாந்தில் 10,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

related posts