முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக் அனுமதி வழங்கப்படும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வாரத்திலிருந்து பூரணமாக கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 7ம் திகதியின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வரும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மாதத்தில் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட அமெரிக்கப் பிரஜைகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியிருந்த்து.
எவ்வாறெனினும் பல்வேறு தரப்பினரும் இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படக் கூடாது என கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.