தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
இலங்கை அணி போட்டித் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றி கொண்டுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் சரித் அசலங்க 47 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் அணித் தலைவர் கேஷவ் மஹராஜ் மூன்று விக்கட்டுகளை வீழத்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 30 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில், ஹென்ரிக் க்ளாஸன் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அறிமுக வீர்ர் தீக்சன 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக துஷ்மந்த சமீரவும், போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக சரித் அசங்கலவும் தெரிவு செய்யப்பட்டனர்.