வரி மோசடிகளில் ஈடுபடுவோரை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கார்பிரேட் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடிகளினால் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக்க் குறிப்பிட்டுள்ளார்.
செல்வந்தர்கள் செல்வம் ஈட்டிக் கொள்வதாகவும் ஏனையவர்கள் வருமானத்தை ஈட்ட முடியாது நிலைமை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வருமான ஏற்றத்தாழ்வை தடுக்க வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானது என ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.