Home உலகம் சுவிஸ் பல்கலைக்கழகங்களில் கொவிட் சான்றிதழ் கோரப்படுகின்றது

சுவிஸ் பல்கலைக்கழகங்களில் கொவிட் சான்றிதழ் கோரப்படுகின்றது

by Jey

சுவிஸ் பல்கலைக்கழகங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் திறக்கும் போது நேரடி விரிவுரைகளுக்கு கொவிட் சான்றிதழ்கள் தேவைப்படும் என்று அறிவித்துள்ளன.

சுவிஸ் மத்திய தொழில்நுட்ப நிறுவகம் Lausanne (EPFL) மற்றும் Lausanne பல்கலைக்கழகங்கள் (UNIL), சூரிச் மற்றும்Neuchâtel ஆகியவை கடந்த வார இறுதியில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டன. St Gallen மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறந்த தரவரிசையில் உள்ள மத்திய தொழில்நுட்ப நிறுவகம் சூரிச் (ETH Zurich) ஆகியவையும் சான்றிதழ் தேவையை அறிவித்துள்ளன.

இலையுதிர்காலத்தில் இருந்து, சுவிஸ் பல்கலைக்கழக வளாகங்களில் சுகாதார நடவடிக்கைகளின் கீழ் – நேரடி கற்பித்தல் முழுமையாக அனுமதிக்கப்படுகிறது.

இலையுதிர் கால செமஸ்டர் தொடங்கும் செப்டம்பர் 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பயிற்சிகளுக்கும் சான்றிதழ் பயன்படுத்தப்படும் என்று EPFL உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட் சான்றிதழ் மாணவர்களுக்கு சிறந்த சுகாதார உத்தரவாதத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கும். இது எங்கள் உள்கட்டமைப்பை அதன் முழுத் திறனுக்கும் பயன்படுத்த அனுமதிக்கும். எங்கள் மாணவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கைக்குத் திரும்ப இது அனுமதிக்கிறது, என்று அதன் செய்தி தொடர்பாளர் கொரின் ஃபியூஸ் கூறினார்.

கலப்பு கற்பிப்பு அணுகுமுறை – அதாவது ஆன்லைன் மற்றும் நேரடி விரிவுரைகள் வழங்கப்படும். எனவே சான்றிதழ் இல்லாத மாணவர்கள் கற்பிப்பதில் இருந்து விலக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts