ஒன்றாரியோ கோவிட் சான்றிதழ் திட்டம் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி அளவில் மாகாண பிரஜைகள் கோவிட் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்கள், சினிமாக்கள், ரெஸ்டுரன்ட்கள், அத்தியாவசியமற்ற வர்த்தக நிறுவனங்கள் போன்றனவற்றிற்குள் பிரவேசிப்பதற்கு இந்த தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
தடுப்பூசி சான்றிதழ் முறைமை குறித்த சட்டங்களை பின்பற்றத் தவறினால் அதற்காக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.