தென் கொரியாவில் தாம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக கனேடிய பிரஜையொருவர் தெரிவித்துள்ளார்.
இரகசியமான கடிதமொன்றின் மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தென்கொரிய சிறைச்சாலையொன்றில் குறித்த கனேடிய பிரஜை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கொரிய-கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையுடைய an-Min Seo என்பவரே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாவதாகத் குற்றம் சுமத்தியுள்ளார்.
முகக் கவசம் அனுப்பி வைப்பது போன்று இந்த கடிதம் இரகசியமாக பிரித்தானிய எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டை தென்கொரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.