அல்பர்ட்டா மாகாணத்தில் பொதுச் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் ஜேசன் கென்னி இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வாறு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக் கணக்கானவர்கள் நாள் தோறும் கோவிட் தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் தடுப்பூசி சான்றிதழ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினால் சிகிச்சை அளிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.