கோவிட் பெருந்தொற்று தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தலில் இருக்கும் கனேடியர்கள் வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் கோவிட் தொற்று உறுதியானவர்கள், தொற்று உறுதியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்கள் உள்ளிட்டவர்கள் வாக்களிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5.8 மில்லியன் கனேடியர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.