Home கனடா லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி

லிபரல், கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி

by Jey

லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் கனடாவில் 44ம் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் நானோஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பில் இரு கட்சிகளுக்கும் சம அளவிலான ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லிபரல் கட்சிக்கு 32.4 வீத ஆதரவு காணப்படுவதுடன், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 31.2 வீத ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, என்.டி.பி கட்சிக்கு 17.5 வீதமான ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

பெரும்பான்மை ஆட்சியை நிறுவும் நோக்கில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தேர்தலை அறிவித்திருந்தார்.

எனினும், இம்முறை தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறைவு என எதிர்வு கூறப்படுகின்றது.

related posts