Home கனடா வதிவிடப்பாடசாலை சிறார்களை கௌரவிக்க 1000 KM நடக்கும் தந்தை, மகன்

வதிவிடப்பாடசாலை சிறார்களை கௌரவிக்க 1000 KM நடக்கும் தந்தை, மகன்

by Jey

வதிவிடப்பாடசாலை சிறார்களை கௌரவிக்கும் நோக்கில் நபர் ஒருவரும் அவரது மகனும் ஆயிரம் கிலோ மீற்றர் நடக்கின்றனர்.

Alan Harrington என்ற நபரும் அவரது 13 வயதான மகன் Nation Harrington  னும் இவ்வாறு நடை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் Kanehsatake பகுதியைச் சேர்ந்த  இருவரும் நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் நடை பயணம் மேற்கொள்கின்றனர்.

வதிவிடப்பாடசாலைகளில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

தந்தை மற்றும் மகனின் நடை பயணம் எதிர்வரும் 28ம் திகதி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் Shingwauk வதிவிடப்பாடசாலை இயங்கிய இடத்தில் இந்த நடை பயணம் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts