கனடாவில், கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டோருக்கும் ஏற்றப்படாதவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி ஏற்றாதவர்கள் சுயநலவாதிகள், பொறுப்பற்றவர்கள் என தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் கருதுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.