Home இலங்கை கொரோனா வைரஸ் பரவுகை அபாயம் குறையவில்லை

கொரோனா வைரஸ் பரவுகை அபாயம் குறையவில்லை

by Jey

” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

” நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்திருந்தாலும், இன்னமும் நாளொன்றுக்கு ஆயிரம்வரை தொற்றாளர்கள் பதிவாகின்றனர். அதேபோல நாட்டில் பல இடங்களிலும் தொற்றாளர்கள் அடையாளங் காணப்படுகின்றனர். எனவே, இந்நிலைமை தொடர்பில் நூறுவீதம் திருப்தி கொள்ள முடியாது.

வைரஸ் பரவுவதற்கான அவதானம் குறையவில்லை. எனவே, நாட்டை திறப்பதாக இருந்தாலும் அதனை படிமுறை ரீதியாகவே செய்ய வேண்டும். அதேபோல சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

related posts