Home கனடா ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் முரண்பாடு

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் முரண்பாடு

by Jey

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

மைக்கல் கோர்விக் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இவ்வாறு முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இருவரையும் விடுதலை செய்வதற்கு உலக சமூகம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், சீனா எதிர்ப்பை வெளியிட்டதனால் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

இரு கனேடியர்கள் சீனாவில் நடாத்தப்பட்ட விதத்தை தொடர்ந்தும் எதிர்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் Marc Garneau தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனேடிய வெளிவிவகார அமைச்சரின் கருத்தை நிராகரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

related posts