இடோபிகோக்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல தடவைகள் கத்தி குத்துக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
படுகாயமடைந்திருந்த நிலையில் இருந்த இளைஞருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
றொரன்டோவில் இந்த ஆண்டில் இடம்பெற்றுள்ள 63ம் படுகொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.