கனடாவில் முதல் தடவையாக உண்மை மற்றும் நல்லிணக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
வதிவிடப்பாடசாலைகளில் காணாமல் போன, உயிரிழந்த சிறார்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
காம்லூஸ் வதிவிடப்பாடசாலை பகுதியில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 215 பேரின் புதைகுழிகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட வதிவிடப்பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் திட்டமிட்ட அடிப்படையில் இனவழிப்புச் செய்யப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான ஓர் பின்னணியில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் விசேட அனுஸ்டிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.