Home உலகம் வடகொரியாவில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடகொரியாவில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

by Jey

வடகொரியாவில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அந்நாட்டின் பியோங்யேங் நகரில் பல்வேறு பகுதிகளிலும் கிருமி தொற்று நீக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உடல் வெப்பநிலையை அளவிடுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கென எல்லைப்பகுதிகளை மூடி உயர்ந்தப்பட்ச சட்டவரையரைகளை அமுல்ப்படுத்த வடகொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறெனினும் வைரஸ் நாட்டுக்குள் ஊடுறுவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

related posts