பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பழங்குடியின சமூகம் மோசமாக நடாத்தப்படுவதனை தற்பொழுது கனடாவின் ஏனைய சமூகங்கள் புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Environics Institute என்ற நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட தொலைபேசி கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அண்மையில் வதிவிடப்பாடசாலைகள் சிலவற்றில் அடையாளம் காணப்படாத புதைகுழிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.