Home இலங்கை பூஜித் ஹேமசிறிக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு

பூஜித் ஹேமசிறிக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு

by Jey

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இருவருக்கும் எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதி சொலிசுட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

புலனாய்வுத் தகவல்க்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடமை தவறி கொலை குற்றச் செயலில் ஈடுபட்டமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் திகதி முதல் இந்த குற்றப் பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணை மூவர் அடங்கிய விசேட நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் பாதுகாப்பதாக எதிர்க்கட்சியும், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts