மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே பயன்படுத்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போலீஸார் வாகனங்கள், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாக இருக்கும் வகையில் மாற்றவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.
நெடுஞ்சாலை திறப்பு விழா ஒன்றில் பேசிய திரு கட்கரி (Nitin Gadkari), ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தும் சைரன்களையும் ஆய்வு செய்து அவற்றை அகில இந்திய வானொலியில் (All Indian Radio) பயன்படுத்தப்படும் இசை போன்று அதன் ஒலியை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என குறிப்பிட்டார்.
தற்போதுள்ள சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலியும் எரிச்சலையும் பதற்றத்தையும் தூண்டும் வகையில் இருப்பதோடு, காதுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.