Home கனடா மத்திய அரச பணியாளர்களுக்கு 29ம் திகதி வரையில் தடுப்பூசி ஏற்ற அவகாசம்

மத்திய அரச பணியாளர்களுக்கு 29ம் திகதி வரையில் தடுப்பூசி ஏற்ற அவகாசம்

by Jey

மத்திய அரச பணியாளர்களுக்கு எதிர்வரும் 29ம் திகதி வரையில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில், விமான சேவை உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் முக்கிய திணைக்களங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத பணியாளர்கள் சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய விமான சேவை நிறுவனங்கள், ரயில் சேவை நிறுவனங்களின் பணியாளர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ள 12 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு கோவிட் தடுப்பூசி மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts