உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் பங்கேற்காமை தமது பிழை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி கனடா முழுவதும் உண்மை மற்றும் நல்லிணக்கத் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
கனடாவில் வதிவிடப்பள்ளிகளில் பழங்குடியின சிறார்கள் துன்புறுத்தப்பட்டமையை நினைவு கூர்ந்து இந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ட்ரூடோ பங்கேற்கத் தவறிமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிகழ்வினை புறக்கணித்துவிட்டு குடும்பத்துடன் பிரதமர் ஒய்வு எடுத்துக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட தினத்தில் நிகழ்வில் பங்குபற்றாது தனிப்பட்ட பயணம் மேற்கொண்டமை ஓர் தவறு எனவும், அதற்காக வருந்துவதாகவும் பிரதமர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.