தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா 2021 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளதாக நோபல் விருது வழங்கும் அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்துள்ளது.
குர்னாவின் நாவல்களில் “பாரடைஸ்” மற்றும் “டெசெர்ஷன்” ஆகியவை அடங்கும். ஆங்கிலத்தில் எழுதும் இவர் பிரிட்டனில் வசிக்கிறார். இந்த பரிசு ஸ்வீடிஷ் அகாடமியால் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு 10 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்கள் ($ 1.14 மில்லியன்) ஆகும்.
ஸ்வீடனை சேர்ந்த டைனமைட் கண்டுபிடிப்பாளரும் பணக்கார தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் இந்த பரிசு உருவாக்கப்பட்டது. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில் செய்யப்பட்ட சாதனைகளுக்காக இந்த பரிசு வழங்கப்படுகின்றது.