கடந்த செப்டம்பர் மாதத்தில் 157000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொழிலின்மை வீதம் 7.1 வீதமாக காணப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 6.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 231000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனியார் துறை மற்றும் பொதுத்துறையில் இவ்வாறு புதிய தொழில்வாய்ப்புக்கள் செப்டம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.