கடந்த 4ஆம் திகதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் தற்காலிகமாக முடங்கின.
உலக அளவில் பல நாடுகளில் சேவை முடங்கியதால் பயனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அடுத்தநாள் அதிகாலை முதல் மூன்று செயலிகளும் மீண்டும் வழமை போல செயல்படத் தொடங்கின.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளில் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கோரி இருந்தார்.
சுமார் 7 கோடி புதிய பயனர்கள் இதன் காரணமாக டெலிகிராமிற்கு மாறியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சில பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மிகவும் வருந்துகிறோம், எங்கள் செயலிகளை பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் உள்ளது விரைவாக சரிசெய்ய பணியாற்றி வருகிறோம்’ என குறிபிட்டுள்ளனர்.