Home இந்தியா தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு – சிறப்பு பேருந்து

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு – சிறப்பு பேருந்து

by Jey

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்ட நிறைவில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு
முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, வருகிற நவம்பர் 1ந்தேதி முதல் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை காலத்தில் சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோன்று பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்பு சொந்த ஊரில் இருந்து திரும்புவோரின் வசதிக்காக 17,719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர் என அரசு தெரிவித்து உள்ளது.

related posts