Home கனடா கரடிகளுக்கு உணவு வழங்கிய பெண்ணுக்கு 60000 டொலர் அபராதம்

கரடிகளுக்கு உணவு வழங்கிய பெண்ணுக்கு 60000 டொலர் அபராதம்

by Jey

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடிகளுக்கு உணவு வழங்கி வந்த பெண் ஒருவருக்கு 60,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவு வழங்குவது உதவி என நினைத்து குறித்த பெண் இவ்வாறு கரடிகளுக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.

Zuzana Stevikova  என்ற பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இந்தப் பெண் கரடிகளுக்கு உணவு வழங்கியுள்ளார்.

வாரந்தம் எப்பள், கரட், பியர்ஸ், முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தப் பெண் கரடிகளுக்கு வழங்கி வந்துள்ளார்.

இவ்வாறு உணவு வழங்கி வந்த நிலையில் மூன்று கரடிகள் வானப் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தன.

இந்த சம்பவத்திற்கு குறித்த பெண் உணவு வழங்கியமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணுக்கு 60,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

related posts