கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்யாத 4 ஒப்பந்ததாரர்களுக்கு காரணம் கேட்டு குறிப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 5 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1¾ லட்சம் அபராதமும், 47 நீர்நிலைகளை புனரமைத்து சீரமைக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத 4 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதமும், மாம்பலம் கால்வாய் கட்டுமான பணிகளில் காலக்கெடுவுக்குள் முடிக்காத ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து கமிஷனர் உத்தரவிட்டார்.
இதில் துணை கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமை என்ஜினீயர் எஸ்.ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.