றொரன்டோவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் வயதான ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து காரணமாக படுகாயமடைந்திருந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பிரிக் வீதி மற்றும் பார்க்சயிட் ட்ரைவ் ஆகிய பகுதிகளில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர்கள் விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.