சிகிச்சைகள் தாமதமான காரணத்தினால் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் பார்வையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020ம் ஆண்டில் காணப்பட்ட முடக்க நிலைமைகள் காரணமாக கண்களை உரிய நேரத்தில் பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவும் முடியாதவர்கள் இவ்வாறு பார்வையை இழந்துள்ளனர்.
கனுடிய பார்வையற்றோர் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கண் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை அளிப்பது வரையறுக்கப்பட்டதனாலும் மூடப்பட்டதனாலும் மக்கள் இவ்வாறு பார்வையை இழக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கண் நோய்களினால் அவதியும் அனைத்து கனேடியர்களும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.