புதிய அமைச்சரவை எப்போது பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படும் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமயிலான லிபரல் கட்சி வெற்றியீட்டியிருந்தது.
எதிர்வரும் 25 அல்லது 26ம் திகதியில் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட உள்ளதாகத் தேரிவிக்கப்படுகின்றது.
பிராந்தியப் பிரதிநிதித்துவம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டு அமைச்சரவை உருவாக்கப்பட உள்ளது.
புதியவர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்க்க் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ட்ரூடோவினால் இந்த முறையும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.