Home இந்தியா இன்று CBSE முதல் பருவ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

இன்று CBSE முதல் பருவ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

by Jey

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை இன்று வெளியிடப்படும். மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in இல் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

சிபிஎஸ்இ (CBSE) 10,12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ள நிலையில், பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions என்ற வகயில் வினாத்தாள் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது. குளிர்காலம் என்பதால் தேர்வுகள் காலை 11.30 மணி முதல் தொடங்கும்.

“10, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் ஆஃப்லைனில் நடத்தப்படும்; அக்டோபர் 18 ஆம் தேதி இதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பருவநிலை -1 பொதுத் தேர்வுகள் 90 நிமிட அவகாசம் கொண்ட அப்ஜெக்டிவ் (MCQ) வகை தேர்வாக இருக்கும்” என்று சிபிஎஸ்இ (CBSE) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல், சிபிஎஸ்இ போர்டு கல்வி அமர்வை இரண்டாகப் பிரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டாம்நிலை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். கோவிட் -19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 இரண்டாவது அலை காரணமாக, 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வாரியம் தேர்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

related posts