Home சினிமா ஒருவரியில் பதில் சொல்வது கடினம்,”

ஒருவரியில் பதில் சொல்வது கடினம்,”

by Jey

நெல்சன் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல் முறையாக நடிக்கிறார், மேலும் இவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் படமும் இதுவே. 2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

கடந்த மாதம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதற்கான சென்னை வந்திருந்தார் பூஜா. தற்போது பீஸ்ட் படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

 

அந்த நகையில் இன்று ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யை பற்றி ஒரு வரியில் சொல்லுமாறு கேட்டார். “ஒருவரியில் பதில் சொல்வது கடினம், இருந்தாலும் முயற்சி செய்கிறேன்..SWEETEST” என்று பதில் கூறினார் பூஜா. ஆண்டுகளுக்கு பிறகு இணையும் விஜய் – பிரகாஷ்ராஜ் கூட்டணி!

பூஜா ஹெக்டேவின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. மேலும் பூஜா ஹெக்டே நடித்து வரும் ராதே சியாம் படம் பற்றிய கேள்விக்கு “Epic Love story. Grand, fairytale visuals” என்று பதிலளித்தார். உங்களது ரசிகர்களை பற்றிய சொல்லுங்கள் என்று கேட்டதற்கு “Protective” என்று கூறியுள்ளார். இதனால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

பல போராட்டங்களுக்குப் பிறகு மிகப்பெரிய நடிகை ஆகி உள்ளீர்கள், ஆரம்ப கால கஷ்டங்களை பற்றி சொல்லுங்கள் என்ற கேள்விக்கு, தொடக்கத்தில் இது நிச்சயமாக ஒரு சவாலாக இருந்தது, எனக்கு வேலை இல்லாத நேரங்கள் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் உங்கள் வேலையில் வைத்து கடினமாக உழைத்தால், அது உங்களுக்கு பல மடங்கு வெற்றியாக வரும் என்று கூறினார்.

 

 

related posts