Home கனடா சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் கோரிக்கை

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் கோரிக்கை

by Jey

சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

கனேடிய சுகாதார திணைக்களத்திடம், பைசர் நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஐந்து முதல் பதினொரு வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 16 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியிருந்த்து.

கடந்த மே மாதம் 13 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோரிக்கை குறித்து முன்னுரிமை அளித்து பரிசீலனை செய்யப்படுமட் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், உயர் விஞ்ஞானபூர்வமான தர நிர்ணயங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

related posts