உத்தராகண்ட் மாநிலத்தில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரூ.7,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளி்ல் சிக்கி 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமோலி மாவட்டம் சென்ற உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, டங்கிரி கிராமத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.